புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனா்.
விழுப்புரத்தை அடுத்த வளவனூர், நரையூர் பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் வளவனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபு, கலியமூர்த்தி ஆகியோர் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக வளவனூரை சேர்ந்த சீனிவாசன் (வயது 45), நரையூர் அருண்குமார் (32) ஆகிய இருவரையும் போலீசார் கைதுசெய்து அவர்களிடமிருந்த 200 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.