ஆட்டோவில் புகையிலை கடத்திய வியாபாரி கைது

கயத்தாறு அருகே ஆட்டோவில் புகையிலை கடத்திய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-30 15:51 GMT

கயத்தாறு:

கயத்தாறு அருகே திருமங்களக்குறிச்சி பஞ்சாயத்தை சேர்ந்த ஓலைகுளம் நடுத்தெருவை சேர்ந்த ராஜாத்தேவர் மகன் சரத்குமார் (வயது 32). வியாபாரி. இவர் பேன்ஸி கடை நடத்தி வருகிறார். நேற்று ஊருக்கு அருகில் ஆட்டோவில் வந்த அவரை கயத்தாறு போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார். அப்போது ஆட்டோவில் இருந்து 36 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தனது கடைக்கு அவர் அவற்றை விற்பனை செய்வதற்காக ஆட்டோவில் கடத்தி வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது ெசய்தனர். அவரிடம் இருந்த புகையிலை பொருட்கள் மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்