பலசரக்கு கடையில் புகையிலை பறிமுதல்

பலசரக்கு கடையில் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-09 18:45 GMT

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி பஜாரில் உள்ள ஒரு பலசரக்கு கடையில் அதிகளவு புகையிலை பயன்பாடு உள்ளதாக மூலைக்கரைப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று அந்த கடையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது கடையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 210 கிலோ எடையுள்ள 670 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி பலசரக்கு கடை உரிமையாளர் ஜோசப் (வயது 52) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்