628 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

628 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2022-12-19 18:32 GMT


சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்திரவின் பேரில் போதை பொருள் தடுப்பு தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மானாமதுரையை அடுத்த முத்தநேந்தல், கொம்பு காரனேந்தல் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த வழியில் வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட 628 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது. தொடர்ந்து தனிப்படை போலீசார் அந்த காரை ஓட்டி வந்த அம்பரீஷ் (வயது31) என்பவரிடம் விசாரித்தபோது அவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து இந்த புகையிலை பொருட்களை கொண்டு வந்து சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடைகளில் விற்பனைக்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அம்பரிசை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில் குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி உள்ளதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் போதை பொருட்களை கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் அவர்கள் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்