மூலங்குடி வழியாக வடபாதிமங்கலத்திற்கு அரசு பஸ் இயக்கப்படுமா?

மூலங்குடி வழியாக வடபாதிமங்கலத்திற்கு அரசு பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-05-14 18:45 GMT

மன்னார்குடியில் இருந்து மூலங்குடி வழியாக வடபாதிமங்கலத்திற்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலங்குடி கிராமம்

கூத்தாநல்லூர் அருகே மூலங்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தையொட்டி திருவாரூர், மன்னார்குடி, வடபாதிமங்கலம் செல்லக்கூடிய மூன்று பிரிவு சாலைகள் அமைக்கப்பட்டது. இதில் வடபாதிமங்கலம் பிரிவு சாலை என்பது ஏராளமான கிராமங்களை உள்ளடக்கிய சாலையாகும். இந்த வழித்தடத்தில் உள்ள வடபாதி, ஓகைப்பேரையூர், நாகராஜன்கோட்டகம், ராமானுஜமணலி, புனவாசல், வடபாதிமங்கலம், கிளியனூர், மாயனூர், உச்சுவாடி, குலமாணிக்கம், பெரியகொத்தூர், ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச்சேர்ந்த மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிகளவில் மன்னார்குடிக்கு சென்று வருகின்றனர்.

அரசு பஸ் இயக்க வேண்டும்

இதற்கு பெரும்பாலும் மூலங்குடி வழியாக செல்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனாலும், வடபாதிமங்கலத்தில் இருந்து மூலங்குடி வழியாக நேரடியாக மன்னார்குடிக்கு சென்று வருவதற்கு இதுவரை பஸ்கள் இயக்கப்படவில்லை. அதனால், பஸ்கள் மாறி மாறி சென்று பயணம் மேற்கொள்கின்றனர். சமயத்தில் பஸ்கள் கிடைக்காத பட்சத்தில் சுமார் 7 கிலோமீட்டர் வரை நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும், மூலங்குடி மூன்று பிரிவு சாலை மன்னார்குடி, திருவாரூர், நாகப்பட்டினம், கூத்தாநல்லூர் போன்ற நகர பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடம் என்பதாலும் மக்கள் அதிகளவில் சென்று வருகின்றனர். அதனால், அதிகளவில் மன்னார்குடிக்கு அப்பகுதி கிராம மக்கள் மூலங்குடி வழியாக சென்று வருவதால், மன்னார்குடியில் இருந்து மூலங்குடி வழியாக வடபாதிமங்கலத்திற்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்