சிறுமியை எரித்துக்கொன்ற பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை

பணகுடியில் சிறுமியை எரித்துக்கொன்ற பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை மகிளா கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-09-27 19:21 GMT

பணகுடியில் சிறுமியை எரித்துக்கொன்ற பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை மகிளா கோர்ட்டு உத்தரவிட்டது.

சிறுமி எரித்துக்கொலை

நெல்லை மாவட்டம் பணகுடி யாதவர் தெருவை சேர்ந்தவர் நாராயணகிருஷ்ணன். இவரது மகள் பாஞ்சாலி (வயது 18). நாராயணகிருஷ்ணனின் தாய் சீதையிடம் அதே ஊரை சேர்ந்த ராஜகோபால் (65) என்பவர் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். இதுதொடர்பாக 2 குடும்பத்தினருக்கும் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு காலையில் வீட்டில் பாஞ்சாலி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் வந்த ராஜகோபால், அவரது மனைவி ராதாசெல்வம் (58) மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் பாஞ்சாலியிடம் தகராறு செய்து அவதூறாக பேசி மண்எண்ணெய்யை ஊற்றி அவரை அருகில் உள்ள விறகு அடுப்பில் தள்ளிவிட்டுள்ளனர். இதில் பாஞ்சாலி உடல்முழுவதும் தீப்பிடித்து எரிந்து உடல் கருகி உயிரிழந்தார். இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

5 ஆண்டு சிறை

இந்த வழக்கு விசாரணை நெல்லை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கை நீதிபதி விஜயகுமார் விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட ராதாசெல்வத்திற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் ராஜகோபால் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயபிரபா ஆஜரானார். இதில் சம்பந்தப்பட்ட சிறுவன் தொடர்பாக நெல்லை சிறார் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்