தெங்குமரஹாடா கிராம மக்களுக்குவீட்டுமனை பட்டா வழங்க இடம் தேர்வுவனத்துறை கூடுதல் முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு ஆய்வு

தெங்குமரஹாடா கிராம மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை வனத்துறை கூடுதல் முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு ஆய்வு செய்தாா்.

Update: 2023-09-07 22:33 GMT

பவானிசாகர்

தெங்குமரஹாடா கிராம மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. இதனை ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, வனத்துறை அதிகாரி ஆய்வு செய்தனர்.

தெங்குமரஹாடா கிராம மக்கள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் மாயாற்றின் கரையில் அமைந்துள்ள தெங்குமரஹாடா வன கிராமத்தில் வசிக்கும் மக்களை வெளியேற்றி மறுகுடியமர்வு செய்ய வனத்துறை பரிந்துரைத்தது. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் படி அக்டோபர் மாதம் 10-ந் தேதிக்குள் மறுகுடியமர்வு செய்யப்பட்டு அதற்கான அறிக்கையை வனத்துறை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தற்போது வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மறுகுடியமர்வு தொடர்பான பணிகளை தீவிரமாக செய்து வருகின்றன.

இதற்கிடையே நேற்று தமிழக வனத்துறை கூடுதல் முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு, ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா மற்றும் வனத்துறை அதிகாரிகள் தெங்குமரஹாடா கிராமத்துக்கு சென்று மறுகுடியமர்வுக்கு விருப்பம் தெரிவித்த மக்களிடம் கலந்துரையாடினர். அப்போது அவர்கள் வனத்துறை கூடுதல் முதன்மை செயலாளரிடம் கிராம மக்கள், தங்களுக்கு வீடு கட்ட இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இடம் தேர்வு

அதைத்தொடர்ந்து வனத்துறை கூடுதல் முதன்மை செயலாளர், ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை அருகே உள்ள கோழிப்பண்ணை பகுதிக்கு சென்றனர். அங்கு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 69 ஏக்கர் நிலத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி 497 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான இடத்தை தேர்வு செய்து ஆய்வில் ஈடுபட்டனர்.

மேலும் இது குறித்த அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் கூறினார்கள். ஆய்வின்போது வனத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்