கலெக்டர் அலுவலகத்துக்குகட்டைகால் கட்டிக்கொண்டுஊர்வலமாக வந்த நாட்டுப்புற கலைஞா்
கலெக்டர் அலுவலகத்துக்கு கட்டைகால் கட்டிக்கொண்டு ஊர்வலமாக நாட்டுப்புற கலைஞா் வந்தாா்
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி கணபதிபாளையம் நால்ரோட்டை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 27). நாட்டுப்புற கலைஞர். இவர் நேற்று பெண்கள் பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கால்களில் கட்டையை கட்டிக்கொண்டு கணபதிபாளையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை 28 கி.மீ. ஊர்வலமாக நடந்து வந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே நான் மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டு இருக்கும்போது சாலை விபத்தில் உயிரிழந்து இருப்பேன். ஆனால் ஹெல்மெட் அணிந்து இருந்ததன் காரணமாக உயிர் பிழைத்து இருக்கிறேன். எனவே இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணியாமல் செல்லக்கூடாது. தற்போது மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் கொடுமைகளை கண்டித்தும், பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்' என்றார்.