கலெக்டரிடம், கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மனு
வாடிக்கையாளர்களிடம் செட்டாப் பாக்ஸ்களை திரும்ப கேட்க கூடாது கலெக்டரிடம், கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மனு
கடலூர்
தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொது நல சங்கத்தினர் அதன் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம் தலைமையில் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட செட்டாப் பாக்ஸ்களை திரும்ப கேட்பதை உடனே நிறுத்த வேண்டும். கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கான நல வாரியத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். அன்லாக் நிலுவை தொகை கோரும் அறிவிப்புகளை தள்ளுபடி செய்திட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
அப்போது கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொது நல சங்க நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.