ஓவர்சேரி வடக்குத்தெருவில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும்
ஓவர்சேரி வடக்குத்தெருவில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும்
கோட்டூர்:
கோட்டூர் அருகே நெம்மேலி கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிளை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ராஜேஷ் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் ஞானசேகரன் வரவேற்றார். இதில் மாவட்ட குழு உறுப்பினர் சிவசண்முகம் பேசினார். கூட்டத்தில், ஆதிச்சபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் நெம்மேலி, ஓவர்சேரி ஆகிய கிராமங்களை சேர்ந்த கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களோடு இணைந்து வருகிற 15-ந்தேதிக்குள் ரத்த தானம் செய்வது. ஓவர்சேரி வடக்குத்தெருவில் 60 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக 1½ கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ரேஷன் கடைக்கு செல்கின்றனர். இவர்கள் ரேஷன் கடைக்கு செல்வதற்கு சாலை வசதி இல்லாமல் வயல்களில் நடந்து சென்று வாங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே ஓவர்சேரி வடக்குத்தெருவில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும். நெம்மேலி பெருமாள்குளத்தை தூர்வாரி அகலப்படுத்தி படித்துறை கட்டித்தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் கிளை செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.