மின் கம்பங்கள் மாற்றி அமைக்கஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்தலைமை பொறியாளர் தகவல்

மின் கம்பங்களை மாற்றி அமைக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று மின்வாரிய தலைமை பொறியாளர் இந்திராணி தொிவித்து உள்ளார்.

Update: 2023-09-07 00:22 GMT

மின் கம்பங்களை மாற்றி அமைக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று மின்வாரிய தலைமை பொறியாளர் இந்திராணி தொிவித்து உள்ளார்.

ஆன்லைன் மின் கட்டணம்

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின் கட்டணத்தை செலுத்தும் வசதி ஆன்லைன் மயமாக்கப்பட்டு உள்ளது. இதனால் மின் நுகர்வோர் பெரும்பாலும் தங்களது செல்போன் செயலி மூலமாகவே மின்கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். இருந்தாலும், ஆன்லைன் மூலமாக மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மின்வாரியம் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஈரோடு மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் இந்திராணி கூறியதாவது:-

ஆன்லைனில் மின்சார கட்டணம் செலுத்தும் வசதியை மின்வாரியம் அறிமுகப்படுத்திய பிறகு நேரில் வந்து மின் கட்டணத்தை செலுத்துபவர்களின் கூட்டம் குறைந்து உள்ளது. மாநில அளவில் 60 சதவீதம் மின் நுகர்வோர்கள் கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்துகின்றனர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரையில் 45 சதவீதம் பேர் ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துகின்றனர். ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதால் கால விரயம் தடுக்கப்படுவதோடு, நாம் நினைத்த நேரத்தில் கட்டணத்தை செலுத்திவிட முடியும்.

கம்பம் மாற்றி அமைப்பு

மின்கட்டண கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்ட பிறகு கடந்த முறை எந்த செயலி மூலமாக கட்டணம் செலுத்தப்பட்டதோ, அதே செயலிக்கு நினைவூட்டல் வந்து விடுகிறது. எனவே காலம் தவறாமல் மின் கட்டணத்தை எளிதாக செலுத்த முடியும்.

இதேபோல் மின் கம்பத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றுவது தொடர்பான விண்ணப்பிக்கும் முறை கடந்த 2 மாதங்களாக ஆன்லைன் படுத்தப்பட்டு உள்ளது. இதில் முன்னுரிமை அடிப்படையில் கம்பங்கள் மாற்றி கொடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்