சுங்கச்சாவடியை அகற்றக்கோரி சிவசேனா கட்சியினர் சாலை மறியல்

வீரபாண்டி அருகே சுங்கச்சாவடியை அகற்றக்கோரி சிவசேனா கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-10 16:40 GMT

வீரபாண்டி அருகே உள்ள உப்பார்பட்டி பகுதியில் கடந்த 1-ந் தேதி சுங்கச்சாவடி திறக்கப்பட்டது. வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த சுங்கச்சாவடி அமைந்துள்ள திண்டுக்கல்-குமுளி சாலை விரிவாக்கப் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. தேனி அருகே பூதிப்புரத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. மேலும் சில இடங்களிலும் பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் முடிவடையும் முன்பே கட்டணம் வசூல் தொடங்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்தநிலையில் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி, சிவசேனா மாநில செயலாளர் குரு அய்யப்பன் தலைமையில் கட்சியினர் சுங்கச்சாவடி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரபாண்டி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவாா்த்தை நடத்தினர். அப்போது தங்கள் கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் மனு கொடுங்கள் என்று போலீசார் கூறினர். அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து கட்சியினர் 29 பேரை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்