தூய்மை காவலர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கக்கோரிகடலூரில், கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தூய்மை காவலர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கக்கோரி கடலூரில், கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.

Update: 2022-12-30 18:45 GMT

தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் பொங்கல்போனஸ் வழங்கக்கோரியும் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொருளாளர் ராஜாமணி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் பழனி வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி களப்பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன், சத்துணவு பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் சீனுவாசன், மாநில தலைவர் தெய்வசிகாமணி, அரசு பணியாளர் சங்கம் விவேகானந்தன், சத்துணவு பணியாளர் சங்கம் சேவியர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி களப்பணியாளர் சங்க நிர்வாகிகள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்