டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க கொசு மருந்து தெளிக்கும் பணி
டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் கொசு மருந்து தெளிக்கும் பணி நடந்து வருகிறது
தேனி மாவட்டத்தில் சில இடங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும்படி மாவட்ட கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார். அதன்பேரில் தடுப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணி நடந்தது. இங்கு காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருவதாக நகராட்சி சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.