தூத்துக்குடியில் குற்றசெயல்களில் ஈடுபடுவதை தடுக்கபள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

தூத்துக்குடியில் குற்றசெயல்களில் ஈடுபடுவதை தடுக்க பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக தூத்துக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தெரிவித்தார்.

Update: 2023-04-13 18:45 GMT

தூத்துக்குடி புறநகர் பகுதியில் இளம் சிறார்களை நல்வழிப்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு நா.சுரேஷ் கூறினார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடவடிக்கை

தூத்துக்குடி ஊரக பகுதியில் ரவுடியிசம், போதை பொருட்கள் விற்பனை உள்ளிட்ட குற்ற செயல்களை தடுப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். ரோந்து பணியையும் அதிகரித்து வருகிறோம். மோட்டார் வாகன சோதனையையும் தீவிரப்படுத்துமாறு போலீசாரை அறிவுறுத்தி உள்ளோம். மக்கள் எந்த நேரமும் புகார் தெரிவிக்கலாம். போலீஸ் நிலையங்களில் மக்கள் அளிக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றால் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் தெரிவிக்கலாம்.

விழிப்புணர்வு

சமீபகாலமாக குற்ற செயல்களில் இளம் சிறார்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இளம் சிறார்கள் போதை பழக்கம் உள்ளிட்டவற்றுக்கு அடிமையாகாமல் தடுக்கவும், குற்றசெயல்களில் ஈடுபடாமல் தடுக்கவும் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அதே போன்று, வீடுகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்துவது தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கண்காணிப்பு கேமிராவை சாலை தெரியும் வகையில் அமைக்க வேண்டும், அதிக திறன் கொண்ட கேமிராக்களை பொருத்த வேண்டும். இதனால் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்க முடியும். மேலும் பொதுமக்கள் போதை பொருட்கள் சம்பந்தமாக ஏதேனும் தகவல் தெரிந்தாலோ, வேறு ஏதேனும் புகார்கள் இருந்தாலும் தூத்துக்குடி ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை 94981 01832 என்ற எண்ணிலும், துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேசை 94982 03301 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்