புத்தக திருவிழா சிறப்பாக நடைபெறஒத்துழைக்க வேண்டும்

திருவாரூரில் வருகிற 25-ந்தேதி தொடங்கும் புத்தக திருவிழா சிறப்பாக நடபெற ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் சாருஸ்ரீ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2023-03-11 19:15 GMT

திருவாரூரில் வருகிற 25-ந்தேதி தொடங்கும் புத்தக திருவிழா சிறப்பாக நடபெற ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் சாருஸ்ரீ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

திருவாரூர் மாவட்டம் புத்தக திருவிழா குறித்து சேவை சங்கங்கள், தமிழ் சங்கங்கள், தன்னார்வு நிறுவனங்கள், மற்றும் பொதுநல அமைப்புக்கள், அரசுத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் முன்னிலை வகித்தார். வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா வரவேற்றார்.

கூட்டத்தில் கலெக்டர் சாருஸ்ரீ பேசுகையில், தமிழக அரசு மாணவர்களிைடயே வாசிப்புத்திறனை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்காக மாவட்டம் தோறும் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது.

புத்தக திருவிழா

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் வருகிற 25-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி வரை புத்தக திருவிழா நடக்கிறது. இந்த புத்தக திருவிழாவில் உள்ளுர் கலைஞர்கள், புத்தக வெளியீட்டாளர்கள், சொற்பொழிவாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

அனைத்து தரப்பினரும் புத்தக திருவிழா திறப்பாக நடைபெற ஒத்துழைப்பு தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சின்னம் வெளியீடு

முன்னதாக புத்தக திருவிழா சின்னத்தை கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டார். இதில் தமிழ் சங்கம், விவசாயிகள் சங்கம், கல்லூரி முதல்வர்கள், அமைப்பு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக சங்கத்தினர், அனைத்து அரசுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் திருவாரூர் மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் தனபால் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்