பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தேனி பங்களாமேட்டில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-11-03 18:45 GMT

தேனி பங்களாமேட்டில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 4 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். 

Tags:    

மேலும் செய்திகள்