திருமண உதவித்தொகை பெறமாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

இ-சேவை மூலம் திருமண உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

Update: 2023-07-20 23:00 GMT

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு இ-சேவை தளம் வழியாக மாற்றுத்திறனாளிகள் கீழ்க்கண்ட 5 திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதன் படி, கல்வி உதவித்தொகை, உதவி உபகரணங்கள் பெறுவது, வங்கி கடன் மானியம், திருமண உதவித்தொகை, மாதாந்திர உதவித்தொகை ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்த அருகே உள்ள இ-சேவை மையம் அல்லது https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இம்மாத இறுதி வரை இ-சேவை மூலமாகவும், நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம். வருகிற ஆகஸ்டு மாதம் முதல் மேற்கண்ட திட்டங்களுக்கான அனைத்து விண்ணப்பங்களும் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பித்து மாற்றுத்திறனாளிகள் பயன்பெறலாம் என்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்