காலிபணியிடங்களை நிரப்பக்கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தபால் அனுப்பிய சாலை பணியாளர்கள்

காலிபணியிடங்களை நிரப்பக்கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சாலை பணியாளர்கள் தபால் அனுப்பினாா்கள்.

Update: 2023-09-30 07:45 GMT

சத்தியமங்கலம்

இறந்த சாலை பணியாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையில் காலியாக உள்ள 4 ஆயிரம் பணியிடங்களை கிராமப்புற இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்தியமங்கலம் சாலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், நெடுஞ்சாலை துறை அமைச்சருக்கும் தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. சத்தியமங்கலம் தலைமை தபால் நிலையத்தில் சாலை பணியாளர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முதல்-அமைச்சருக்கு நேற்று காலை தபால்களை அனுப்பினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்