விழாக்கள் குறித்து பக்தர்கள் அறிந்து கொள்ள வசதியாக பண்ணாரி அம்மன் கோவிலில் எல்.இ.டி. திரை

விழாக்கள் குறித்து பக்தர்கள் அறிந்து கொள்ள வசதியாக பண்ணாரி அம்மன் கோவிலில் எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-10-13 22:45 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தை அடுத்து பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அரசு விடுமுறை நாட்கள், பண்டிகை தினங்கள், அமாவாசை, பவுர்ணமி, திங்கட்கிழமை, மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்கள் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். மேலும் இந்த கோவிலுக்கு தமிழ்நாடு மட்டும் இன்றி கர்நாடகாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்வார்கள்.

இந்த நிலையில் பண்ணாரி அம்மன் கோவில் வளாகத்தின் முன்புறம் ரூ.5 லட்சம் மதிப்பிலான 7 அடி அகலம், 6 அடி நீளம் கொண்ட எல்.இ.டி. திரை பொருத்தப்பட்டு உள்ளது.

இந்த திரையில் கோவில் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் ஒலிபரப்பபட்டு வருகிறது. மேலும் திருவிழா பற்றிய நிகழ்ச்சிகள், பக்தர்கள் குண்டம் இறங்குதல், அம்மனின் திருவீதி உலா, திருவிளக்கு பூஜை, அமாவாசை, பவுர்ணமி தினங்களில் நடைபெறும் பூஜைகள், வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு கோவிலில் செய்யப்பட்டு உள்ள வசதிகள், திருமண மண்டபம், விடுதிகள், கட்டண சீட்டு விவரம், போன்றவை ஒலிபரப்பப்படுகிறது. மேலும் கோபி பாரியூர் அம்மன் கோவில், மேட்டுப்பாளையம் வன பத்தரகாளியம்மன் கோவில் பற்றிய விவரங்களும் ஒலிபரப்பபட்டு வருகிறது..

Tags:    

மேலும் செய்திகள்