அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்கவிழிப்புணர்வு பிரசாரம்
தேனி அருகே அன்னஞ்சி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பாக, விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
தேனி அருகே அன்னஞ்சி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பாக, விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. பிரசாரத்தை ஊஞ்சாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியம்மாள் தொடங்கி வைத்தார். ஊஞ்சாம்பட்டி, அன்னஞ்சி ஊர்களில் தலைமை ஆசிரியர் செந்தில்குமார் தலைமையில் ஆசிரியர்கள் வீதி, வீதியாக சென்று ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்தனர். அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்தும், பள்ளியின் தரம் குறித்தும் எடுத்துக் கூறினர். மேலும் வீடு, வீடாக பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.