ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்; உதவி கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜனதாவினர் மனு

ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜனதாவினர் மனு கொடுத்தனர்.

Update: 2022-06-25 14:13 GMT

கோவில்பட்டி:

கோயில்பட்டியை அடுத்துள்ள இனாம் மணியாச்சி பஞ்சாயத்து, ஆலம்பட்டி கண்மாய் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கோவில்பட்டி உதவி கலெக்டர் நேர்முக உதவியாளர் இசக்கிராஜூவிடம் பா.ஜனதா அரசு தொடர்பு துறை மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம் மனு கொடுத்தார். அதில், "இனாம் மணியாச்சி பஞ்சாயத்து ஆலம்பட்டி கண்மாய் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பை அகற்றி கண்மாய்க்கு சீராக மழை நீர் வர வழி அமைத்து கொடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர் மாரிமுத்து ராஜா, மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர் முனிராஜ், ஒன்றிய தலைவர் கந்தசாமி, வக்கீல் கோபிநாத், அருண் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்