முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற உள்ள வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்துக்கு தயாராவோம்:அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற உள்ள வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்துக்கு தயாராவோம் எனறு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.

Update: 2023-07-30 18:45 GMT

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்துக்கு தயாராவோம் என்று மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுலகத்தில் நேற்று மாலையில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

தயாராவோம்

அப்போது, திருச்சியில் கடந்த 26-ந் தேதி 15 மாவட்ட வாக்குசாவடி முகவர்களுக்கான பயிற்சி பாசைற கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இதே போன்று கன்னியாகுமரி முதல் ராமநாதபுரம் வரையிலான 10 மாவட்டங்களை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் விரைவில் ராமநாதபுரத்தில் நடைபெற உள்ளது. அதற்கு நாம் தயாராவோம். அதற்கான ஆலோசனை கூட்டம் தான் தற்போது நடக்கிறது. இதே போன்று ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் மீனவர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதில் மீனவ மக்களை திரளாக பங்கேற்க வைக்க வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும'் என்று கூறினார்.

தொடர்ந்து ஒன்றியம், நகரம், பேரூர் கழகம் வாரியாக நிர்வாகிகளை தனித்தனியாக அழைத்து உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன. வாக்குசாவடி முகவர்கள் எவ்வாறு தயார் நிலையில் இருக்கவேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, மாவட்ட துணை செயலாளர்கள் ஜெயக்குமார் ரூபன், ஆறுமுகபொருமாள், சோபியா, மாவட்ட பொருளாளர் ராமநாதன், ஒன்றியசெயலாளர்கள் பார்த்திபன், ஜெயக்கொடி, சுப்பிரமணியன், ரவி, இளங்கோ, ரமேஷ், இளையராஜா, பொன்முருகேசன், சரவணகுமார், ஜோசப், கோட்டாளம், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, பகுதி செயலாளர் சிவக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் மாடசாமி, மாவட்ட பிரதிநிதி நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்