தூத்துக்குடி மாவட்டத்தில் 10 நபர்கள் கொண்ட குழுவுக்குநவீன சலவையகம் அமைக்க ரூ.3 லட்சம் நிதியுதவி:கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 நபர்கள் கொண்ட குழுவுக்கு நவீன சலவையகம் அமைக்க ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-22 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் நவீன சலவையகம் அமைக்க 10 நபர்கள் கொண்ட குழுவுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

நவீன சலவையகம்

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக, மாறிவரும் சூழலுக்கு ஏற்ப 10 நபர்களை கொண்டு ஒரு குழுவாக அமைத்து நவீன சலவையகம் புதியதாக அமைக்க அரசால் ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதிய நவீன சலவையகம் தொடங்குவதற்கான குழுவானது 10 நபர்களை கொண்டு செயல்படுத்தும் வகையில் அமைக்கப்பட வேண்டும். குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். குழுவில் உள்ள உறுப்பினர்களது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

சிறு, குறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவுக்கு முன்னுரிமை வழங்கப்படும். புதிய நவீன சலவையகம் தொடங்க ஆர்வமாக உள்ள சலவைத் தொழிலில் முன் அனுபவமுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மக்கள், குழுவாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பம் பெற்று 15.9.2023-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் வருமானச் சான்று, சாதிச்சான்று, குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை நகல் இணைக்க வேண்டும். தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் கூடுதல் விவரங்களுக்கு 0461-2341378 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்