டி.என்.பி.எஸ்.சி. இலவச மாதிரி தேர்வு
புதுக்கோட்டையில் நாளை நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்.சி. இலவச மாதிரி தேர்வுக்கு தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
டி.என்.பி.எஸ்.சி. மாதிரி தேர்வு
புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) 92 பணிகாலியிடங்களுக்கான (துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, உதவி இயக்குனர் (ஊரக வளர்ச்சி) குரூப்- 1 தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வு வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. எனவே இத்தேர்விற்கு தயாராகும் புதுக்கோட்டை மாவட்டத்தினை சேர்ந்த போட்டி தேர்வர்கள் பயனடையும் வகையில் அதற்கான இலவச மாதிரி தேர்வு நாளை (புதன்கிழமை) புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
சீருடைப்பணியாளர் தேர்வு
மேலும், தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் 3,552 பணிக்காலியிடங்களுக்கான (இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்பாளர்) தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு இத்தேர்வு வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இலவச மாதிரித்தேர்வு வருகிற 18, 22-ந் தேதிகளில் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
இம் மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தேர்விற்கான விண்ணப்பநகல் மற்றும் புகைப்படத்துடன் தேர்வு அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் மாதிரி தேர்வுகளை எழுதி பயன்பெறுமாறு என கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.