டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தோல்வி:விஷம் குடித்து பெண் தற்கொலை

வீரபாண்டி அருகே டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தோல்வி அடைந்ததால் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து ெகாண்டார்.

Update: 2023-08-17 18:45 GMT

வீரபாண்டி அருகே உள்ள வயல்பட்டி இந்திரா காலனி தெருவை சேர்ந்தவர் சிரங்கசாமி. இவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது 33). பி.ஏ. பட்டதாரியான பாக்கியலட்சுமி அரசு பணிக்காக டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதி வந்தார். இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அவர் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் கடந்த 15-ந்தேதி அவர் வீட்டில் யாரும் இல்லாதபோது அரளி விதையை (விஷம்) அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது தாயார் அன்னக்கொடி வீரபாண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்