டி.என்.பி.எஸ்.சி. விரிந்துரைக்கும் தேர்வு; 91 பேர் எழுதினர்
டி.என்.பி.எஸ்.சி. விரிந்துரைக்கும் தேர்வுவை 91 பேர் எழுதினர்.
அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தப்படும் துறை தேர்வுகள் மே-2022 கொள்குறி வகை கணினி தேர்வு கடந்த 6-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை காலை மற்றும் மதியம் ஆகிய 2 வேளைகளில் கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் விளாங்குடி அரசு பொறியியல் கல்லூரி ஆகிய 2 தேர்வு கூடங்களில் நடைபெற்றது. மேலும், விரிந்துரைக்கும் வகையிலான தேர்வுகள் நேற்று முதல் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை மற்றும் மதியம் ஆகிய 2 வேளைகளில் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. மேற்படி இத்தேர்வினை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் ஏ.வி.பாலுசாமி அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்த தேர்வினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காலையில் நடைபெற்ற இத்தேர்வினை எழுத விண்ணப்பித்த 56 நபர்களில், 35 நபர்கள் தேர்வு எழுதினர். 21 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை. மேலும், மதியம் நடைபெற்ற இத்தேர்வினை எழுத விண்ணப்பித்த 72 நபர்களில், 56 நபர்கள் தேர்வு எழுதினர். 16 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை.