தமிழகத்தில் மேலும் 522 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 522- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் புதிதாக 248 ஆண்கள், 274 பெண்கள் என மொத்தம் 522 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 110 பேர், செங்கல்பட்டில் 53 பேர் உள்பட 35 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.
மேலும், 12 வயதுக்குட்பட்ட 24 குழந்தைகளுக்கும் , 60 வயதுக்கு மேற்பட்ட 101 முதியவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் 445 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால் திருப்பூர் மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிப்புக்குள்ளாகி 5 ஆயிரத்து 233 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.