தமிழ்நாட்டில் மேலும் 39- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 39 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

Update: 2023-03-11 16:29 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 39 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இதில், 22 ஆண்கள் மற்றும் 17 பெண்கள் அடங்குவார்கள். அதிகபட்சமாக கோவையில் 10 பேருக்கும், சென்னையில் 7 பேருக்கும்,சேலத்தில் 5 பேருக்கும் , மற்றும் வெளிநாட்டு பயணிகள் 3 பேர் உள்பட மொத்தம் 13 மாவட்டங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயத்தில் 25 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படவில்லை. இதேபோல தமிழகத்தில் கடந்த சில நாட்களை போன்று உயிரிழப்பு எதுவும் இல்லை.

மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்