தமிழகத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.
சென்னை, -
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று தொற்று பாதிப்பு 10 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: -
தமிழகத்தில் இன்று புதிதாக 8 ஆண்கள், 2 பெண்கள் உள்பட மொத்தம் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, திண்டுக்கல், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 35 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. தமிழகத்தில் கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.