தமிழகத்தில் இன்று 6 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 6 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

Update: 2022-12-20 15:19 GMT

சென்னை,

இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. அந்தவ கையில் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்க எண்களில் மட்டுமே பதிவாகி வருவது மக்களுக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது.

குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் 6 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: -

தமிழகத்தில் இன்று புதிதாக 2 ஆண், 4 பெண்கள் உள்பட மொத்தம் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, திருப்பூர் உள்பட மொத்தம் 5 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 33 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. தமிழகத்தில் கொரோனா தோற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்