தமிழகத்தில் மேலும் 187- பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு உயிரிழப்பு எதுவும் இல்லை.

Update: 2022-10-25 15:50 GMT

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு சீராக குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய பாதிப்பும் நேற்றை விட சரிந்து 187- ஆக பதிவாகியுள்ளது. நேற்று ஒருநாள் பாதிப்பு 198-ஆக இருந்தது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

தமிழகத்தில் இன்று ஆண்கள் 109, பெண்கள் 78 என மொத்தம் 187 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதிகபட்சமாக சென்னையில் 49 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 390- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 2,736- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை.

Tags:    

மேலும் செய்திகள்