கலைஞர் மகளிர் உரிமை திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இறுதி ஆலோசனை

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இறுதி ஆலோசனை நடத்த உள்ளார்.

Update: 2023-09-11 02:27 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் 1 கோடி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். 2023-24-ம் நிதியாண்டில் இந்த திட்டத்தை செயல்படுத்திட ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டது.

இத்திட்டத்தை வரும் 15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான டோக்கன்கள் மற்றும் விண்ணப்பங்களை வீடு வீடாக சென்று விநியோகம் செய்யும் பணிகளும் நடைபெற்றன. மகளிர் உரிமை திட்டத்திற்காக இதுவரை தமிழ்நாடு முழுவதும் 1.63 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமை தொகை தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இறுதி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்தும் நடைமுறை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்