த.ம.மு.க. பொதுக்கூட்டம்

திருவேங்கடத்தில் த.ம.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.

Update: 2023-03-25 18:45 GMT

திருவேங்கடம்:

திருவேங்கடம் மகாத்மா காந்தி நகரில் அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் முன்னேற்ற சங்கம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், தேவேந்திரகுல வேளாளர் பட்டியலின வெளியேற்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடந்தது. த.ம.மு.க. மண்டல செயலாளர் இன்பராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கணேசன், மாவட்ட செயலாளர் மாடசாமி, பொருளாளர் வெள்ளத்துரை ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாவட்ட மகளிர் அணி செயலாளர் செந்தில் அரசி வரவேற்று பேசினார்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், ''பட்டியலின வெளியேற்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிற ஜூலை மாதம் சங்கரன்கோவிலில் மாநில மாநாடு நடத்தப்படுகிறது. இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும்'' என்றார்.

மாநில இளைஞரணி தலைவர் வியங்கோ பாண்டியன், மாநில துணை பொதுச்செயலாளர்கள் நெல்லையப்பன், அருண் பிரின்ஸ், மாநில மகளிர் அணி செயலாளர் நளினி சாந்தகுமாரி, தலைமை நிலைய செயலாளர் தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர் மகேந்திரன் ஆகியோர் பேசினர்.

மாவட்ட இணை செயலாளர்கள் கோபி, ஜெயக்குமார், இளைஞரணி செயலாளர் வைரமூர்த்தி, குருவிகுளம் ஒன்றிய தலைவர்கள் பாலமுருகன், சின்னத்துரை, ஒன்றிய செயலாளர்கள் இன்பராஜ், முத்துசாமி, திருவேங்கடம் பேரூர் தலைவர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருவேங்கடம் பேரூர் செயலாளர் அய்யனார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்