த.மா.கா. சார்பில் கையெழுத்து இயக்கம்

வீரவநல்லூரில் த.மா.கா. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

Update: 2023-05-24 19:19 GMT

சேரன்மாதேவி:

நெல்லை கிழக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி வீரவநல்லூரில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

கிழக்கு மாவட்ட தலைவர் மாரிதுரை தலைமை தாங்கினார். வீரவநல்லூர் 12-வது வார்டு உறுப்பினர் ஆறுமுகம், வட்டார தலைவர் பாத்தலிங்கம், கண்ணன், இசக்கி, ரமேஷ், முருகன், முத்து, சாந்தாராமன், சங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் வீரவநல்லூர் நகர புதிய தலைவராக அனந்தராமன், மாவட்ட செயலாளராக துரைராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் மூர்த்தி செய்து இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்