திருவொற்றியூர் காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாளுக்கு 20 கிலோ லவங்க மாலை
திருவொற்றியூர் காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாளுக்கு 20 கிலோ லவங்க மாலை அணிவித்து பிரமாண்ட அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள பழமையான கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமையான நேற்று மூலவர் கல்யாண வரதராஜ பெருமாளுக்கு வெண்பட்டாடை உடுத்தி, ராஜ அலங்காரம் செய்யப்பட்டு ஏழு நிறங்களில் விஷேச புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
உற்சவர் பவழ வண்ண பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, தாயார் ஆண்டாள் நாச்சியாருக்கு 20 கிலோ எடையிலான வாசனை நிறைந்த லவங்கம் மற்றும் அலங்கார பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட மாலை, ஜடை, கிரீடங்கள் அணிவித்து பிரமாண்ட அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் பக்தியுடன் பெருமாளை வழிபட்டனர்.