விழாக்கோலம் பூண்ட திருவாரூர் தியாகராஜர் கோவில்

திருவாரூர் தியாகராஜர் கோவில்ஆடி சுவாதி விழாவையொட்டி சுந்தரர், பரவை நாச்சியார் திருக்கல்யாணம் இன்று நடக்கிறது. இதையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவில் விழாக்கோலம் பூண்டுள்ளது.

Update: 2023-07-24 18:45 GMT


திருவாரூர் தியாகராஜர் கோவில்ஆடி சுவாதி விழாவையொட்டி சுந்தரர், பரவை நாச்சியார் திருக்கல்யாணம் இன்று நடக்கிறது. இதையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவில் விழாக்கோலம் பூண்டுள்ளது.

திருக்கல்யாணம்

பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் சர்வ தோஷ பரிகார தலமாகவும் பஞ்சபூதத் தலங்களில் பூமிக்குரிய தலமாகவும் விளங்குகிறது. திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது.

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி சுவாதி விழா சிறப்பாக நடப்பது வழக்கம். விழாவில் சுந்தரமூர்த்தி நாயனாரும், பரவை நாச்சியாருக்கும் திருகல்யாணம் நடக்கும். இதில் திருவாரூர் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொள்வார்கள்.

அலங்கார தோரணம்

இந்த ஆண்டுக்கான திருக்கல்யாணம் இன்று நடக்கிறது. இதனையொட்டி இன்று காலை 7 மணிக்கு நம்பி ஆரூராரை (சுந்தரர்) நிறைகுடம் கொடுத்து புதுத்தெரு சுந்தரா் நாலுகால் மண்டபத்தில் இருந்து அழைத்தலும், 8 மணிக்கு பரவை நாச்சியார் திருமாளிகையில் இருந்து புறப்படுதலும், 9 மணிக்கு நம்பி ஆரூராருக்கும், பரவை நாச்சியாருக்கும் திருக்கல்யாணமும் நடக்கிறது.

மாலை 3 மணிக்கு பரவை நாச்சியாா் கோவிலில் சுந்தரருக்கும் பரவை நாச்சியாருக்கும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு நம்பி ஆரூரார் 63 நாயன்மார்களுடன் தேரோடும் வீதியில் நாதஸ்வர இசையுடன் வீதியுலா செல்கிறார். நாளை (புதன்கிழமை) மாலை 6.30 மணிக்கு நம்பி ஆரூரார் வெள்ளை யானையில் கைலாய வாத்தியங்களுடன் வீதிஉலா சென்று, கைலாயக்காட்சி நடக்கிறது. இவ்வாறு தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடக்கும் நிலையில் கோவில் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதன் ஒருபகுதியாக பனைஓலை கொண்டு பணியாளர் அலங்கார தோரணம் செய்தனர். மேலும் கோவில் முழுவதும் அலங்கார மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் பந்தல் போடப்பட்டுள்ளது.

இதனால் திருவாரூர் தியாகராஜர் கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்