நாட்டின் பல்வேறு கலாச்சாரங்களை ஒன்றிணைக்கிறது திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம்

நாட்டின் பல்வேறு கலாச்சாரங்களை ஒன்றிணைக்கிறது திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் என துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்தார்.

Update: 2023-05-04 18:45 GMT

நாட்டின் பல்வேறு கலாச்சாரங்களை ஒன்றிணைக்கிறது திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் என துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்தார்.

இலக்கிய திருவிழா

திருவாரூரை அடுத்து உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ஆங்கில துறை சார்பில் இலக்கிய திருவிழா நடந்தது. இந்த விழாவில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மத்திய பல்கலைக்கழகத்தில் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பதிவாளர் (பொறுப்பு) சுலோச்சனா, சமூக அறிவியல் மற்றும் மொழியியல் புலமுதன்மையர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆங்கில துறை தலைவர் கீதா வரவேற்றார். ஆங்கில துறை முதுகலை 2-ம் ஆண்டு மாணவர்கள் நடித்து காட்டிய சிலப்பதிகாரம் நாடகத்தை பார்த்த துணைவேந்தர் கிருஷ்ணன், அதில் நடித்த மாணவர்களை பாராட்டினார்.

ஒன்றிணைக்கிறது

அப்போது அவர் பேசுகையில், மத்திய பல்கலைக்கழகத்தின் அருகில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்களில் உள்ள பள்ளி மாணவர்களிடம் தொடர்பை ஏற்படுத்தி கொண்டு சமுதாய முன்னேற்றத்திற்கு பங்களிக்க வேண்டும். திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் நாட்டின் பல்வேறு கலாச்சாரங்களை ஒன்றிணைக்கிறது.

நீங்கள் தொடர்பு ஏற்படுத்தி கொண்டால் பள்ளி மாணவர்களும் நாட்டில் பல்வேறு கலாச்சாரங்களை பின்பற்றுவார்கள் என்றார்.

தொடர்ந்து துறை சார்பில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் பூபதி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்