திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முதலிடம்

துப்பாக்கி சுடும் போட்டியில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முதலிடம் பிடித்தார்.

Update: 2023-04-04 17:30 GMT

செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் 2 நாட்கள் வடக்கு மண்டல காவல்துறையினர் அளவில் துப்பாக்கி சுடும் போட்டிகள் நடைபெற்றது.

இதில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்ட திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஒட்டுமொத்த துப்பாக்கி சுடுதலில் முதலிடத்தையும், இன்சாஸ் ரக துப்பாக்கி சுடும் போட்டியில் முதலிடத்தையும், பிஸ்டல் ரக துப்பாக்கி சுடும் போட்டியில் 2-ம் இடத்தையும் வென்றார்.

மேலும் வந்தவாசி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்தி ஒட்டுமொத்த துப்பாக்கி சுடுதலில் 3-ம் இடத்தையும் வென்றார்.

மேலும் பெண் போலீசாருக்கென நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்ட திருவண்ணாமலை மாவட்ட பெண் போலீசார் 5 பதக்கங்களை வென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்