திருப்புல்லாணி யூனியன் கூட்டம்

திருப்புல்லாணி யூனியன் கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-09-30 18:45 GMT

திருப்புல்லாணி யூனியன் கூட்டம் அதன் தலைவர் புல்லாணி தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் சிவலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்வரி, மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். யூனியன் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:- பைரோஸ்கான்:- பெரியபட்டினம் தங்கையாநகரில் சேதமடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். பஸ் நிலையத்தில் இடையூறாக உள்ள அரசு கட்டிடத்தை அகற்ற வேண்டும்.

கமலா கருப்பையா:- யூனியன் திட்டப்பணிகள் குறித்து கவுன்சிலர்களுக்கு தெரிவிப்பதில்லை. சுமதி:- முத்துப்பேட்டையில் கொசு புகை மருந்து அடிக்க வேண்டும். திருமுருகன்:- திரு உத்தரகோசமங்கை, ஆலங்குளத்தில் பழுதடைந்த ரேஷன் கடை, துணை சுகாதார நிலையம், சமுதாய கூடம் ஆகியவற்றுக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.

நாகநாதன்:- ரெகுநாதபுரம் பகுதியில் மின் வாரியம் தொடர்பான குறைகளை தீர்க்க அலுவலர்கள் ஒத்துழைப்பதில்லை. இதனால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். சிவலிங்கம்:- மாயாகுளம் கிழக்கு மங்களேசுவரி நகரில் ஜல்லி கற்கல் கொட்டி பல நாட்களாகியும் சாலை போடாமல் உள்ளது. தலைவர்:- கவுன்சிலர்களின் குறைகள், கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது. 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்