மாநில ஈட்டி எறிதல் போட்டிக்கு திருப்பத்தூர் மாணவர் தேர்வு
மாநில ஈட்டி எறிதல் போட்டிக்கு திருப்பத்தூர் மாணவர் தேர்வு செய்யப்பட்டார்
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 19 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் திருப்பத்தூர் கிறிஸ்துராஜா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர் கவி வர்மன் ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பெற்றார். மேலும் மாணவர் மாநில அளவில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவர் கவிவர்மனை பள்ளி தலைவர் விக்டர், தாளாளர் ரூபன், முதல்வர் தபசுகரீம், உடற்கல்வி ஆசிரியர் ஜீவா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.