திருப்பத்தூர் பேரூராட்சி கூட்டம்

திருப்பத்தூர் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது

Update: 2023-09-30 18:45 GMT

திருப்பத்தூர் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேர்மன் கோகிலா ராணி நாராயணன் தலைமை தாங்கினார். அலுவலக உதவியாளர் குமாரசாமி வரவேற்றார். தொடர்ந்து தலைமை எழுத்தர் தமிழ்ச்செல்வி அறிக்கை வாசித்தார். மேலும் சேர்மன் கோகிலாராணி நாராயணன் பேசுகையில், மழைக்காலம் வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாலைகளில் தேங்கும் நீரை உடனடியாக வெளியேற்றவும், மழை நீர் தேங்காமலும் இருக்க வடிகள் வாய்க்கால்களை சுத்தம் செய்து ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும் ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் பணிகள் முடித்தவுடன் பணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும்,. பழுதடைந்த தெரு விளக்குகளை உடனடியாக சீரமைத்து கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். இதில் துணை தலைவர் கான்முகமது, 18 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்