பொங்கல் தொகுப்பு வழங்கியதில் திருப்பத்தூர் மாவட்டம் முதலிடம்

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கியதில் திருப்பத்தூர் மாவட்டம் முதலிடம் பிடித்தது.

Update: 2023-01-18 17:55 GMT

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கியதில் தமிழகத்திலேயே திருப்பத்தூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் ஜி.சரஸ்வதி கூறியதாவது:-

தமிழக அரசு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, ரொக்கம் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து, கடந்த 9-ந் தேதி இந்த திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் டோக்கன் வழங்கப்பட்டு அதன்படி பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 657 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும். இதில் 3 லட்சத்து 22 ஆயிரத்த்து 774 அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. இது 99.43 சதவீதமாகும். தமிழகத்திலேயே 39 மாவட்டங்களில் திருப்பத்தூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்

திருப்பத்தூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்தத்தற்காக மாவட்ட வழங்கல் அலுவலர் ஜி.சரஸ்வதி மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் திருமலை உள்ளிட்ட அதிகாரிகல் கலெக்டர் அமர்குஷ்வாஹா பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்