திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வேண்டும்- இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் பேட்டி

திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் பேட்டி அளித்தார்.

Update: 2023-07-02 21:12 GMT

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றத்தில் இந்து மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தை தொடர்ந்து இந்து மக்கள் கட்சி அலுவலகத்தில் இருந்து திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வாசல் வரை அர்ஜூன் சம்பத் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர்.பின்னர் அவர்கள் கோவில் அலுவலகத்திற்கு சென்று அலுவலர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து அர்ஜூன் சம்பத் கூறும்போது:-

திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோவில், கார்த்திகை தீப தூண், கோவிலின் தலவிருட்சகம் உள்ளது. திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்கும் பொறுப்பு, கடமை ஒவ்வொரு முருக பக்தர்களுக்கும் இருக்கிறது. மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது மக்கள் இயக்கமாக நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு தடை விதிக்கிறார்கள். திருப்பரங்குன்றம் மலையானது கந்தர்மலை. திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க, சொத்துக்களை பாதுகாக்க இந்து அறநிலையத்துறை செயல்பட வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்