பிரசன்ன வெங்கடேச பெருமாள் ேகாவிலில் திருக்கல்யாண உற்சவம்

வந்தவாசியை அடுத்த ஸ்ரீரங்கராஜபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேசபெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

Update: 2022-05-21 17:17 GMT

வந்தவாசி

வந்தவாசியை அடுத்த ஸ்ரீரங்கராஜபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேசபெருமாள் கோவிலில் இன்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

அதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

அதன்பிறகு திருக்கல்யாண உற்சவத்துக்காக கிராமத்தில் உள்ள குட்டியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்து பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் அர்ச்சகரிடம் சமப்பித்தனர்.

இதையடுத்து சிறப்பு ஹோமம், திருக்கல்யாணம், மகா பூர்ணாஹூதி நடந்தது. ரகுநாதன் பட்டாச்சாரியார் திருக்கல்யாண உற்சவத்தை நடத்தி வைத்தார்.

நிகழ்ச்சியில் கிராம பிரமுகர்கள், பொதுமக்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்