செத்தவரை சொக்கநாதர் கோவிலில்திருக்கல்யாணம் உற்சவம்
செத்தவரை சொக்கநாதர் கோவிலில் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது.
செஞ்சி,
செஞ்சி தாலுகா செத்தவரை நல்லாண்பிள்ளை பெற்றால் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மீனாட்சி உடனுறை சொக்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும், பிரம்மோற்சவம் கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
இதில் நேற்று மீனாட்சி உடனுறை சொக்கநாத பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் சொக்கநாதர், மீனாட்சியம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து, சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் அருள்பாலித்தனர்.
அங்கு செத்தவரை கிராம மக்கள் சொக்கநாத பெருமானுக்கும், நல்லாண் பிள்ளை பெற்றால் கிராம மக்கள் ஸ்ரீ மீனாட்சி அம்மனுக்கும் சீர்வரிசை பொருட்கள் கொண்டு வர சம்பிரதாயப்படி, திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. ஸ்ரீ சிவஜோதி மோன சித்தர் திருக்கல்யாண நிகழ்ச்சியை நடத்தி வைத்தார்.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட உற்சவர்கள் கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள், சிவனடியார்கள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.