திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
கீழ்பெரும்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் 473-ம் ஆண்டு தீமிதி விழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தீமிதி உற்சவம் நேற்று முன்தினம் எருமணந்தாங்கல் முதல் நாள் உற்சவமாக தொடங்கியது. 2-ம் நாள் பொய்யப்பாக்கம் உபயமாக திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அப்போது மேள,தாளங்கள் முழங்க கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தர்களின் பக்தி கோஷங்களிடையே அர்ஜூனர் திரவுபதிக்கு தாலி கட்டும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் கீழ்பெரும்பாக்கம், பொய்யப்பாக்கம், எருமணந்தாங்கல், காகுப்பம், சாலையாம்பாளையம், மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் 10-ம் நாளான வருகிற 31-ந் தேதி தீமிதி விழா நடைபெற உள்ளது.