திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோவிலில்ஐகோர்ட்டு நீதிபதி புகழேந்தி திடீர் ஆய்வு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோவிலில் சூரசம்ஹார ஏற்பாடுகள் குறித்து ஐகோர்ட்டு நீதிபதி புகழேந்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா ஏற்பாடுகளை மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதி புகழேந்தி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கந்தசஷ்டி விழா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
நீதிபதி திடீர் ஆய்வு
இந்நிலையில் நேற்று இரவு மதுரை ஐகோர்ட்டுகிளை நீதிபதி புகழேந்தி திடீரென்று கோவிலுக்கு வந்தார். பின்னர் கோவில் வளாகத்தில் ேமற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அவர் ஆய்வு செய்தார். அவர் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் தங்கி இருக்கும் தற்காலிக கொட்டகைகள் உள்ளிட்ட கோவில் வளாகத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை அவர் ஆய்வு செய்தார். மேலும், விரதம் இருக்கும் பக்தர்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
கலந்து கொண்டவர்கள்
ஆய்வின் போது திருச்செந்தூர் சப்-கோர்ட்டு நீதிபதி வஷித்குமார், குற்றவியல் நீதித்துறை நடுவர் வரதராஜன், அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கண்ணன், கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.