திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வளாக தூய்மைப்பணி

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வளாக தூய்மைப்பணி நடந்தது.

Update: 2022-10-20 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் அகதர மதிப்பீட்டுக்குழு மற்றும் சுயநிதிப்பிரிவு நாட்டு நலப்பணித்தட்டம் அணி எண்:231 மற்றும் 3-ம் ஆண்டு வணிகவியல்துறை மாணவர்கள் இணைந்து கல்லூரி வளாகத்தில் தூய்மைப்பணியை மேற்கொண்டனர். கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமையில், கல்லூரி வளாகம், சுற்றுப்புற பகுதிகளில் குவிந்து கிடந்த குப்பைகளை அகதர மதிப்பீட்டுக்குழு மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட அணி எண்:231 மாணவர்கள் அப்புறப்படுத்தினர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அகதர மதிப்பீட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் அ.அந்தோணி சகாய சித்ரா வரவேற்று பேசினார். கல்லூரி ெசயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட தலைவர் ச.சிவக்குமார், பேராசிரியர் ம.திலிப்குமார், அலுவலக கண்காணிப்பாளர் பெ.பொன்துரை மற்றும் வணிகவியல், வணிக நிர்வாகவியல் துறை மாணவர்கள் கலந்து ெகாண்டு கல்லூரி முன்பகுதியை சுத்தப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்