திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில்இலவச இ-சேவை மையம் திறப்பு

திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இலவச இ-சேவை மையத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

Update: 2023-09-25 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இலவச இ-சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். தமிழக மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு இ-சேவை மையத்தை திறந்து வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கணினி சேவையை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், சண்முகையா, எம்.எல்.ஏ., தாசில்தார் வாமனன், துணை தாசில்தார்கள் தங்கமாரியப்பன், சங்கராநாராயணன், நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ், தி.மு.க. வர்த்தக அணி மாநில இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், நகர செயலாளர் வாள்சுடலை, நகராட்சி கவுன்சிலர்கள் செந்தில்குமார், தினேஷ் கிருஷ்ணா, ஒன்றிய செயலர்கள் நவீன்குமார், இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்